![]() |
அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: செப்ரெம்பர் மாதம் வரையான 9 மாதங்களில் 1,099 படையினர் போரில் கொல்லப்பட்டனர். 7,000 படையினர் காயமடைந்துள்ளனர்.செப்ரெம்பரில் 200 படையினர் கொல்லப்பட்டனர். 997 படையினர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா படைத்தளபதிகளைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தம்மிடம் அடைக்கலமடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், விடுதலைப் புலிகள் தமது போராளிகள் கொமாண்டோக்களைக் கொண்டு மிக மோசமான தாக்குதலைத்தான் நடத்துவார்கள். அதில் அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வார்கள் என்று எதிர்பார்த்தனர். அக்கராயனில் 21 ஆம் நாள் படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 33 பேர் கொல்லப்பட்டனர். இது விடுதலைப் புலிகள் காட்டுகின்ற கடுமையான பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.இப்போது பெய்கின்ற கடும் மழை படையினரின் ஊர்திகளின் பயணங்களை பலவீனப்படுத்தியுள்ளதுடன் படையினரின் வழங்கலைப் பாதித்துள்ளது. கிளிநொச்சிக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவில் சிறிலங்கா படையினர் சிலர் நிற்கின்றனர். ஆனால் பின்னால் 10 முதல் 15 கிலோ மீற்றர்கள் தொலைவில் படையினர் மழை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என பாதுகாப்பு பக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்துலக படைத்துறை ஆய்வு ஊடகம் தெரிவித்துள்ளது. |
Thursday, October 23, 2008
நடப்பாண்டு செப்டம்பர் வரை 1,099 படையினர் பலி - 7'000 பேர் படுகாயம் சிறிலங்கா படைத்தரப்பு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment