![]() |
தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு பிரிவினர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் மகிந்த ராஜபக்சவே தமிழ்நாட்டுக்கு கைது செய்து சிறையில் அடைக்கும் காலமும் வரும்- தமீழத் தமிழர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவோம் என்றும் அறைகூவல் விடுத்தனர். தமிழ்த் திரையுலக பிரமுகர்களான இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், சீமான், அமீர் மற்றும் இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இன உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர். |
Monday, October 20, 2008
ஈழத்தை உருவாக்குவோம்: இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்டமான பேரணி- பொதுக்கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment