Friday, October 24, 2008

காங்கேசன்துறையில் தாக்கப்பட்ட கப்பலின் அடியில் இராணுவத்தினருக்கான ஆயுதங்கள்



'றுகுணு' கப்பல் உட்பட இரு கப்பல்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து நேற்று கடற்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. றுகுணு கப்பல்மூலம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஊடாக யாழ் குடாநாட்டிற்கு உணவுப்பொருட்கள் அனுப்புவதாக வெளியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டவாறு படைக்கல நகர்த்தல்களுக்கும் படையினருக்கான உணவுப்பொருட்களை ஏற்றியிறக்குவதற்கும் இக்கப்பலை படையினர் பயன்படுத்திவந்தனர்.

கடற்புலிகளால் இக்கப்பல் தாக்கியழிக்கப்பட்டபோது இக்கப்பலின் கீழ்தட்டில் படையினருக்கான ஒருதொகுதி ஆயுதங்களும் சீருடைகளும் களமுனைக்குத்தேவையான அவசிய உணவுப்பொதிகளும் இருந்ததாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சரியாக 7.10 மணியளவில் கடற்புலிகள் இக்கப்பல்கள் மீதான தாக்குதலைமேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பருத்தித்துறைமுகத்தில் சிறிலங்காப் படையினரது கப்பல் மீது கடற்புலிகள் தாக்குதலை நடத்தியதையடுத்து அத்துறைமுகம் செயலிளந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்புலிகளின் காங்கேசன்துறை கடற்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து வடமராட்சி மணற்காடு கடற்படைத் தளத்தில் புதிய ராடர் கருவி பொருத்தப்பட்டு கடல்கண்காணிப்பை படையினர் விரிவாக்கி உள்ளனர். ஏற்கனவே குடத்தனை கொட்டோடைப் பகுதியில் ராடர் கருவி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடற்புலிகளின் தாக்குதலையடுத்து கடற்கண்காணிப்பையும் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment