Thursday, October 16, 2008

ஓஸ்லோ: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஜப்பானைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த விருது கூட்டாக கிடைத்துள்ளது. மூலக்கூறு இயற்பியல் பிரிவில் இந்த விருது கிடைத்துள்ளது.

மூலக்கூறு இயற்பியலில், அடிப்படை மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா, அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் விருது கிடைத்துள்ளது.

பிரபஞ்சம் உருவானது தொடர்பான கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக இந்த மூவரும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பல விரிவான விளக்கங்களையும் அதில் அளித்துள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்துத்தான் ஜெனீவா அருகே பிக் பாங்க் குறித்து, புரோட்டான்களை மோத விடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி தற்ஸ் தமிழ்


--------------------
தமிழிற்கு அமுது என்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

No comments:

Post a Comment