Thursday, October 23, 2008

இத்தாலியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு



இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

இத்தாலியில் உள்ள பலெர்மோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மாபெரும் கவனயீPர்ப்பு பேரணியினை இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

பலெர்மோ மத்திய பகுதியில் அமைந்துள்ள பியாட்சா பொலித்தியாமத்தில் இருந்து முற்பகல் 10:30 நிமிடத்துக்கு தொடங்கிய பேரணி, இத்தாலி உள்நாட்டு அமைச்சினை நோக்கி சென்றது.





தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா அரசின் இனவாதப்போரை நிறுத்துமாறும்-

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்குமாறும்-

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பணிகளை தடையில்லாது மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும்

கோரிக்கை விடுத்து இந்த பேரணி நடைபெற்றது.





சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனக்குரல்களை எழுப்பியும் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியும் மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர்.

நிகழ்வின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இத்தாலி உள்நாட்டு அமைச்சின் அலுவலகத்தில் கையளித்தனர்.






No comments:

Post a Comment