![]() |
இந்திய வெளியுறவு அமைச்சர் பிராணப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்ததுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக்கட்சிகள் பிரதிநிதிகள் குழு அளித்த பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான நட்வர்சிங் பேசுகையில், இந்திய இலங்கை உடன்பாடு தொடர்பாகவும் ஏ 9 வீதி மூடப்பட்டது குறித்தும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் ஆளுமை செலுத்த முயற்சிப்பதாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
வவுனியா விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் இந்தியா தொழில்நுட்ப பணியாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பின்னர் இலங்கை அரசு அவ்விடத்தில் இருந்து இந்தியா ராடாரை அகற்றிவிட்டு சீனாவின் திரிடி(3ஈ) ராடாரை நிறுவியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பிலும் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
அ.தி.மு.க உறுப்பினர் டாக்டர் மைதிரியன் பேசும்போது, வவுனியா விமான நிலையத்தின் மீது அண்மையில் நடத்திய தாக்குதலினால் இரண்டு பொறியியலாளர்கள் காயமடைந்தார்கள் அவ்விருவரும் இந்தியர் என்பதை இலங்கை ஜனாதிபதியே உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்திய அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏன்? அவர்களின் நிலைதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். என்றார்.
மேலும் இருநாட்டு ஒப்பந்தங்களின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்ததா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசுகையில், இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆயுத உதவி வழங்கியதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அதேபேõல் கச்சதீவு இந்திய மீனவர்களின் உரிமை தொடர்பாகவும் விளக்க வேண்டுமென்றும் கேட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் டி. ரங்கராஜன் பேசும்போது, இனிமேல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராதென உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதா எனக்கேட்டார். தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி கேட்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் திருநாவுக்கரசு பேசும்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் இந்தியா பேசி இருக்கிறதா? எனக் கேட்டார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரணாப் முகர்ஜி நீண்ட விளக்கம் அளித்து பதிலளித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைமூலம் தீர்வு காணமுடியாது. இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அனைத்து கட்சி உயர்நிலை குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். அதுதான் தீர்வுகாண்பதற்கான வழி. சில பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்குவது குறித்த பரிந்துரைகளையும் அந்தக் குழு பரிந்துரைத்திருக்கின்றது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை ஜனாதிபதி அறிவித்ததன் பிறகு நிலைமை அங்கு மோசமடைந்ததாக சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதே இதற்கு சரியான வழியென்று மீண்டும் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகுறித்து பேசும் போது, இலங்கையில் நிலவும் பிரச்சினையால் தமிழகத்திற்கு பெருமளவு அகதிகள் வரும் சூழ்நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அதனால் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,மருந்து தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செயதுகொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றனர். போராட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானது, துரதிஸ்டவசமாக அந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றன. எது எப்படியிருந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படõமல் தடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பõகும் என்று இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் மூன்று மூத்த அதிகாரிகள் சார்க் மாநாட்டிற்கு முன்னதாக திடீரென இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த மூன்று அதிகாரிகளும் இலங்கை அரசுடன் அவர்களது பாதுகாப்பு தேவைகள் குறித்து விவாதித்தார்கள். மற்றநாடுகளின் உதவியை நாடாத பட்சத்தில் இலங்கையில் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இலங்கை சர்வதேச நாடுகளின் ஆடுகளமாக பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை ஏனென்றால் அந்த நாடு எமது நாட்டிற்கு மிக அருகாமையில் உள்ளது.
இந்தியாவிற்கு வருகைதரவிருக்கின்ற ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவுடன் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது தொடர்பிலும் கச்சைத்தீவு விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்படும்
No comments:
Post a Comment