Thursday, October 23, 2008

ஏகனில் நயன்தாரா கவர்ச்சி எப்படி? -ராஜுசுந்தரம் விளக்கம்



பெயருக்கேற்றார் போலவே ஏக போக வசூலை வாரிக்கொண்டு போகும் போலிருக்கிறது ஏகன்.

இப்படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜுசுந்தரம் மற்றும், ஐங்கரன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் அருண்பாண்டியன் இருவரும் படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இதுவரைக்கும் 100 படங்களுக்கும் மேல் டான்ஸ் டைரக்டரா இருந்திருக்கேன். அஜீத்தும் நானும் நல்ல நண்பர்கள் என்பதால் அவரை டைரக்ட் பண்ணுவதில் எனக்கொன்றும் சிரமம் இல்லை. காமெடியும் ஆக்ஷனும் கலந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். அஜீத் பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறாரா என்று கேட்கிறாங்க. டயலாக்கில் பஞ்ச் இருக்கும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அதுமட்டுமில்லே, பில்லா படத்தை விட இந்த படத்தில் நயன்தாராவின் கவர்ச்சி எந்தளவுக்கு இருக்கும்னு கேட்கிறாங்க. கதைக்கு தேவைப்படுகிற அளவுக்கு இருக்கும் என்று ஹாஸ்யமாகவே பேசிக் கொண்டிருந்தார் ராஜுசுந்தரம்.

உலகம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட பிரண்டுகள் போட்டிருக்கிறோம். சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதுவரை வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களை வாங்கி வெளியிட்டோம். ஆனால், ஏகன் முழுக்க முழுக்க எங்கள் தயாரிப்பில் உருவான படம். அதனாலேயே முதல் நாள் விளம்பரங்களில் ‘தல’ தீபாவளி என்ற வாசகத்தை போடப் போகிறோம். இந்த படத்திற்கு தன்னோட முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அஜீத் சாருக்கு என்னோட நன்றி என்றார் அருண்பாண்டியன்.

சேவல், ஏகன் ஆகிய இருபடங்களின் உரிமையும் ஐங்கரன் வசம்தான் இருக்கிறது. தீபாவளி ரிலீசில் பெரிய படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவை இரண்டு மட்டும்தான்! ஆக, ஐங்கரனுக்கு இது கலெக்ஷன் தீபாவளி!

No comments:

Post a Comment