Friday, October 17, 2008

ஹிட்லரது படைக்கு எதிராக ரஸ்யர்கள் போராடியதைப்போல புலிகள் தாக்குதலை நடாத்தக்கூடும் - ஹரிஹரன்



ஹிட்லரது படையினால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஸ்ய போராளிகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியான வெற்றி கொண்டதன் பின்னர் அரசியல் ரீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவாதத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற சாத்தியம் காணப்பட்டால் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு முன்வைக்கப்பட்டதனைப் போன்றதொரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் அண்மைக்காலமாக இலங்கை மீது காட்டி வரும் கரிசனையை கருத்திற் கொண்டு மிகவும் தந்திரோபாயமாக இலங்கைப் பிரச்சினையை அணுக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும், பிழையான அணுமுறைகளினால் பல்வேறு எதிர்விளைவுகள் ஏற்படக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இலங்கைத் தமிழர் தொடர்பில் காட்டிய அக்கறை தற்போதைய பிரதமர் மன்மோன் சிங்கிடம் தென்படவில்லை என ராமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment