Friday, October 17, 2008

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசை தலையிடக்கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பதவி விலகுகிறார்கள்



இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 அமைச்சர்கள் தமது பதிவி விலகல் கடிதத்தை இன்று கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதியிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவலின் படி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டி.ஆர். பாலு ஏ. ராஜா எஸ்.எஸ். பாலமாணிக்கம் சுப்புலக்சுமி ஜெகதீசன் எஸ். ரகுபதி வீ. வெங்கடாபதி மற்றும் ராதிகா செல்வி ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதவி விலகல் மூலம் இலங்கையிலுள்ள தமது சகோதரர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான உரிய முனைப்புகளை புதுடில்லி அரசாங்கம் எடுக்க வேண்டுமென்ற செய்தியை வலியுறுத்துவதற்கும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்ப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் உரிய முனைப்புகளை எடுக்காவிட்டால் உணவுகள் ஆடைகள் மற்றும் மருந்துகளை சேகரித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக அனுப்பு வதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment