![]() |
இப்படி மாற்றி மாற்றி வாள் வீசிக் கொண்ட இருவரும், இப்போது தோள் மேல் தோள் சாய்ந்து தோழமை வளர்ப்பதுதான் ஆச்சர்யம். இந்த ஆரோக்கியமான மாற்றம், தமிழ்சினிமாவில் பெரும் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தனது படத்தில் வரும் வில்லனின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயரை வைக்க சொல்லியிருக்கிறார் அஜீத். இதுவும் ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறது. அஜீத் நடிக்கும் ஏகன் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் சுமன். படத்தில் இவரது பெயர் ஜோசப் சின்னப்பா. க்ளைமாக்சில் டயலாக் பேசும் அஜீத், சுமனை பெயர் சொல்லி அழைப்பது போல சீன். அப்போதுதான் சுமனின் பெயரே தெரிந்ததாம் அஜீத்திற்கு. திடீரென்று சுதாரித்துக் கொண்டவர், “இந்த பெயரை மாத்திடுங்களேன்” என்றாராம். விஷயம் புரியாமல் குழம்பிய இயக்குனரை தனியே அழைத்து, “விஜயின் பெயரும் ஜோசப் விஜய்தான். நான் ஏதோ வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுத்தது போலாகிவிடும். நானும் அவரும் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இந்த நேரத்தில் இது வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்திவிடும்” என்றாராம் அஜீத். அப்புறம் என்னாச்சு? ஜோசப் சின்னப்பா, இப்போதும் வெறும் சின்னப்பாவாகி விட்டார்! |
Thursday, October 16, 2008
வில்லங்கமான பெயர் வெட்ட சொன்ன அஜீத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment