![]() |
மணிரத்னம் படத்தில் தங்கச்சியாக நடிக்கிறார். ராமர் பிரச்சனையில் நாடே குளிர் காய்ந்து கொண்டிருக்க, ராவணன் கதையை எடுத்து வருகிறார் மணிரத்னம். இதில் ராவணனாக நடித்து வருகிறார் விக்ரம். சீதையாக நடிக்கிறார் ஐஸ்வர்யாராய். ப்ரியாமணியும், ப்ருத்திவிராஜும் கூட நடிக்கும் இப்படத்தில் இருவரும் ஜோடி என்று யூகிக்கப்படும் தகவல்கள் சரியானவை அல்ல! சூர்ப்பநகையாக நடிக்கிறாராம் ப்ரியாமணி. அட, இதென்ன சரித்திர படமா? அப்படியெல்லாம் இல்லை. கர்ணன் கதை எப்படி தளபதியானதோ, அப்படிதான் ராவணன் கதை அசோகவனம் ஆகியிருக்கிறது. ப்ரியாமணி சூர்ப்பநகை என்றால், ராவணனாக நடிக்கும் விக்ரமுக்கு தங்கச்சியா? ஆமாம்...ஆமாம்! பருத்தி வீரன் படத்திற்கு பிறகு விஜய், விக்ரம் சூர்யாவோடு டூயட் பாடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ப்ரியாமணி, இப்படி தங்கச்சி வேடத்திற்கு சம்மதம் சொன்னது சரியா? முன்னணி நடிகையாக இருந்தாலும், முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகையாக இருந்தாலும், மணிரத்னம் படங்களில் நடிப்பதுதான் அவர்களின் லட்சியம். எனவே கொடுக்கிற வேடத்தில் நடிப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும்? இது ஒருபுறம் இருக்க, அசோகவனம் படப்பிடிப்பு கேரள வனப்பகுதிகளில் நடந்து வந்தது. திடீரென்று இப் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட, முட்டி மோதி மீண்டும் அனுமதி பெற்றுவிட்டார் மணி. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீண்டும் துவங்கிவிட்டது படப்பிடிப்பு. |
Thursday, October 16, 2008
தங்கச்சியானார் ப்ரியாமணி அண்ணனாக நடிக்கிறார் விக்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment