![]() |
சிலம்பரசன் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடிகளாக ஸ்னேகா, மும்பை மாடல் சனா கான் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். இந்தப் படம் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு கலர்புல் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என சிலம்பரசன் கூறவே, தயாரிப்பாளர்களும் ஒப்புக் கொண்டார்களாம். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் மின்சார விளக்குகள் பொருத்திய உடையுடன் ரஜினி ஆடிய 'வச்சிக்கவா...' பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவெடுத்தனர். இந்தப் பாடலுக்கு ஒரிஜினல் இசை தந்தவர் இசைஞானி இளையராஜா. இப்போது அவர் மகன் யுவன் சங்கர் ராஜா அந்தப் பாட்டை சிம்புவுக்காக ரீமிக்ஸ் செய்துள்ளார். ரஜினி எந்த மாதிரி உடை அணிந்து ஆடினாரோ அதேமாதிரி டிசைன் செய்யப்பட்ட உடையை வடிவமைத்து அணிந்து இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார் சிம்பு. சிம்புவும், சனா கானும் இந்தப் பாடலுக்காக 6 நாட்கள் இரவு-பகலாக ஆடியுள்ளனர். |
Thursday, October 16, 2008
ரஜினி பாட்டுக்கு சிம்பு நடனம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment