[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:26 மு.ப ஈழம்] [க.நித்தியா] |
![]() |
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கும் ஜெயலலிதாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். "நீங்கள் முதல்வராக அமர்ந்திருந்த போதுதான் நான் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, எட்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடா சட்டம் நடைமுறையில் இருந்தபோதும், ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் சென்று வந்தேன். வெளிப்படையாக அமைந்த அந்தப் பயணத்துக்காக அப்போது ஏன் ஜெயலலிதா என்னைக் கைது செய்யவில்லை?" "ஈழத் தமிழர்களின் ஒப்பாரியிலும் அரசியல் நடத்தும் பெண் தலைவருக்குத் தாயுள்ளம் துளியும் இல்லை! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை மக்கள் விரோத கட்சியாக நடத்தி, அதற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அது ஈழத் தமிழர்களுக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
Monday, October 27, 2008
யாழ். சென்று திரும்பிய போது கைது செய்யாத ஜெயலலிதா தற்போது என்னை கைது செய்ய வலியுறுத்துவது ஏன்?: திருமாவளவன் கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment