Thursday, October 16, 2008

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலையடுத்து 50 சுமையூர்திகள் வவுனியாவுக்கு திரும்பின



வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் சென்ற 50 சுமையூர்திகள் சிறிலங்கா படையினரின் ஆட்லறி எறிகனை தாக்குதலினால் மீண்டும் வவுனியாவுக்கு திரும்பிவிட்டதாக தொவிக்கப்படுகின்றது.

50 சுமையூர்திகளுக்கு ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணைய அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி சென்றிருந்தனர்.

இன்று வியாழக்கிழமை நண்பகல் திரும்பிய 50 சுமையூர்திகளும் பாதுகாப்பாக வவுனியா செயலகத்தில் தரித்து நிற்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்திதீவு ஆகிய பிரதேசங்களில் இடம்பெயாந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்த சுமையூர்திகள் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் சேதங்கள் எதுவுமின்றி வவுனியாவுக்கு திரும்பியுள்ளதாக வவுனியா செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டிசுட்டானை நோக்கி விடுதலைப் புலிகள் ஏவிய ஆட்லறி எறிகளைகள் மாங்குளத்திற்கு இடைப்பட்ட ஏ-9 வீதியில் விழுந்து வெடித்ததாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் இராணுவத்தினரே ஆட்லறி எறிகணைத் தாக்குதலை நடத்தியதாக சுமையூர்திகளில் சென்ற பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற சுமையூர்திகளை நோக்கியே ஆட்லறி எறிகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிட பரதிநிதி கோலடன் வைசுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment