![]() |
பிரான்சின் தலைநகரான பாரிசில் றிபப்பளிக் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டில் சதுக்கம் வரையில் நடத்தப்படவிருந்த பேரணிக்கு பிரான்ஸ் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் திரளத்தொடங்கினர். இதில் அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்களும் கலந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட போதும் காவல்துறையின் தடைகளையும் மீறி தேசியக் கொடிகளுடன் மக்கள் ஒன்றுகூடி தாயகத்தில் அவலப்படும் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். |
Monday, October 20, 2008
பிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment