Monday, October 20, 2008

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பிரதான வீதிகள் 30 நிமிடத்துக்கு மூடப்படுகிறது



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து நாடாளுமன்றம் வரையான பிரதான வீதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் காலையும் மாலையும் 30 நிமிட நேரத்திற்கு முடப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

முற்பகல் 9:00 மணி தொடக்கம் முற்பகல் 9:30 நிமிடம் வரையும் பின்னர் மாலை 5:00 மணி தொடக்கம் 5:30 நிமிடம் வரையும் குறித்த பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதிகள் முடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளமையினால் பிரதமர், மூத்த அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முன்னிட்டும் அவர்களின் போக்குவரத்துக்கு வசதியாகவும் வீதிகளை குறித்த நேரத்திற்கு மூட தீர்மானித்ததாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீதான தாக்குதலையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment