Thursday, October 23, 2008

சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம்-காங்கிரஸ் எதிர்ப்புக்கு கண்டனம்: ராஜபக்சேயின் கொடும்பாவி எரிப்பு



இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடியவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தி.க. மற்றும் திரையுலகத்தினர் போராட்டம் நடத்தினர்.

இதற்கு, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் கண்டனம் தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இலங்கைத் தமிழர்களை பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேச்சை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment