இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். |
சென்னையில் பகத் சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய "கனவாகிப்போன கச்சதீவு" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு நூலை வெளியிட, முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வைகோ பேசியதாவது: மாவீரன் பகத் சிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத் சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். விடுதலைப் புலிகள் தமிழினத்தை மீட்க போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை செய்து வருகிறது. அந்த இராணுவங்களைக் கொண்டு சிறிலங்கா அரசு அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான். சிறிலங்கா இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மட்டும் தேசபக்தியா? இந்திய அரசு உடனடியாக இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும், சிறிலங்காவும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் போட்டுள்ளன என்பது இன்னும் வெளியே தெரியாத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கப்போகின்றது. தமிழர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சுடுவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வருகிற 10 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர். |
Wednesday, October 8, 2008
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவை விமர்சிப்பது தேசத்துரோகம் எனில் தொடர்ந்தும் அதை செய்வேன்: வைகோ
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment