Wednesday, October 8, 2008

வன்னியில் மும்முனைச் சமரில் 62 படையினர் பலி - விடுதலைப் புலிகள்.



நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து கிளிநொச்சியின் தென்பகுதியில் மும்முனைகளினூடாக முன்னேற முயன்ற ராணுவத்தின் மீது தமது தாக்குதல்ப் படையணிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளின் தளபதிகள் வன்னியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த எதிர்த் தாக்குதல்களில் 26 சிங்களப் படையினர் முருகண்டி - அக்கராயன் பகுதியிலும், 16 பேர் வன்னி விளாங்குளம் பகுதியிலும், மேலும் 20 பேர் வன்னேரிக்குளத்திலும் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மூன்று முனைகளிலும் ஆகிரமிப்புப் படைகள் தமது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டதுடன், அக்கராயன் சமரில் மேலும் 49 சிங்களப் படையினரும், வன்னி விளாங்குளத்தில் 23 படையினரும் காயமடைந்ததாகவும் புலிகள் அறிவித்துள்ளனர். சமரின் பின்னர் நடந்த தேடுதலில் பல ஆயுதங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தக் கடும் சமரானது, கடந்த சில தினங்களாக கிளிநொச்சியிலும் அதன் சுற்றுப்புறம் மீதும் நடந்த அகோர எறிகணை, பல்குழல் மற்றும் விமானத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.

தமது இழப்புகள் பற்றிப் புலிகளின் அதிகாரிகள் எதுவும் குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment