Thursday, October 2, 2008

விடுதலைப் புலிகளின் அரசியல் நடுவச் செயலகம், சமாதானச் செயலம் மீது வான் தாக்குதல்கள்: இரு பொதுமக்கள் பலி!


தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் மீதும், விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் நடுவப் பணியகம் மீது சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது வீதியால் சென்ற அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அருகில் உள்ள வீடுகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சுப்பையா சிவலிங்கள் (அகவை 48), தங்கவேலு ரகு (அகவை 30) ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment