Tuesday, October 7, 2008
பரத்தின் ஆசை தீர்த்த சிம்ரன்!!
சிம்ரனோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட(!) நாள் ஏக்கம். இந்த சேவல் படத்தில் அது நிறைவேறிவிட்டது. அதுவும் அவரோடு டூயட் கூட பாடியிருக்கிறேன் என்று புளகாங்கிதப்படுகிரார் இளம் நாயகன் பரத்.
விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளர் அவதாரமெடுத்திருக்கும் ஜின்னாவின் முதல் தயாரிப்பு சேவல்.
ஹரி இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ பரத். தெலுங்கு தேசத்தின் கவர்ச்சி நாயகி பூனம் பஜ்வா நாயகியாக நடித்திருக்கும் முதல் படம். இந்தப் படத்தில் கதாநாயகிக்கு இணையான வேடத்தில் நடித்திருப்பவர் முன்னாள் கனவுக் கன்னி சிம்ரன்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்ற பரத், இப்படத்தில் எனக்கு ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த அருமையான வேடம். குறிப்பாக நெல்லை வட்டார வழக்கில் பேச வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு சிம்ரன்.
அவரோடு நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை எனக்கு. இதில் அவர் நடித்திருக்கும் வேடம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். அவருடன் சேர்ந்து டூயட் ஆடியிருக்கிறேன் என்றார் பரத்.
டைரக்டர் ஹரி பேசுகையில், என் படங்களில் 70 சதவீதம் கமர்ஷியல் 30 சதவீதம் யதார்த்தம் இருக்கும். சேவல் படத்தில் 70 சதவீதம் யதார்த்தம், 30 சதவீதம்தான் கமர்ஷியல். நிச்சயம் இந்த புது காம்பினேஷன் உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் ஜின்னா, ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment