Tuesday, October 7, 2008

மலேசியாவில் குதித்த நமீதா!




Namitha

மலேசியாவில் நடந்த படப்பிடிப்பின்போது 200 அடி உயர கட்டடத்திலிருந்து டூப் போடாமல் தானே குதித்து அனைவரையும் 'அதிர' வைத்துள்ளார் நமீதா.

நமீதாவுக்கு வர வர தைரியம் ஜாஸ்தியாகி விட்டது. முன்பு போல டூப் போடாமல் பல விஷயங்களை அவர் செய்கிறார். அவரே நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது டூப் போடாமல் 200 அடி உயர கட்டடத்திலிருந்து குதித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளாராம்.

சரத்குமார் நடித்து வரும் படம் 1977. இப்படத்தில் நமீதா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை மலேசியாவில் நடத்தினர். அப்போது நமீதா 200 அடி உயர கட்டடத்திலிருந்து குதிப்பது போல ஒரு காட்சி.

டூப் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என அனைவரும் திட்டமிட்டனர். ஆனால் உள்ளே பாய்ந்த நமீதா, அதெல்லாம் வேண்டாம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தாருங்கள், நானே குதிக்கிறேன் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

அய்யய்யோ, இது சரிப்பட்டு வராது, பிரச்சினையாகி விடும் என்று நமீதாவை ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ்குமார் பயமுறுத்தி தடுத்துள்ளார். இருப்பினும் நமீதா பிடிவாதமாக நான்தான் குதிப்பேன் என்று கூறி விட்டார்.

என்ன செய்யலாம் என்று யோசித்த படக்குழுவினர் உரிய முன்னேற்பாடுகளை செய்தனர். நமீதாவை பத்திரமான முறையில் குதிக்க வைக்க தேவையானவற்றை செய்து விட்டு கட்டடத்தின் மீது ஏற்றினர்.

மூச்சை இழுத்துப் பிடித்தபடி அனைவரும் கீழே படபடப்புடன் இருக்க, நமீதா அங்கிருந்து தொபீர் என குதித்தார். விழுந்த வேகத்தில் அவர் எழுந்து நின்ற பின்னர்தான் அத்தனை பேருக்கும் மூச்சே வந்ததாம்.

நமீதாவின் தைரியத்தை யூனிட்டார் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனராம்.

நமீதா விழுந்த இடத்தில் பள்ளம் ஏதும் விழலையே!

No comments:

Post a Comment