| [ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 06:50.56 AM GMT +05:30 ] [ தினக்குரல் ] |
கண்டி பிரதான அஞ்சல் அலுவலக கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூட மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார். கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு இவ் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்தும் உரையாற்றுகையில்; பருத்தித்துறை முதல் தேவேந்திரம் வரை சிங்கக்கொடி ஏற்றப்பட்டதும் பிரபாகரனின் அச்சுறுத்தல் பீதியின்றி தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரும் நாட்டில் எந்தப் பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்று வரக் கூடிய, வாழக்கூடிய சுபீட்ச நிலை உருவாகும். அதனை உருவாக்குவதே எமது நோக்கமுமாகும். இந்த நாட்டில் தேசிய அரசியல் வாதிகள் இருக்க வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிப்பவராக பங்கருக்குள் பதுங்கி வாழ்ந்து வரும் பயங்கரவாதியான பிரபாகரன் இருக்கும் நிலையை மாற்றியமைத்திருப்பவர் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. நாம் முதுகெலும்புடனேயே செயல்படுகின்றோம். பயங்கரவாதிகள் சொல்கின்றபடியெல்லாம் உடனடியாக செயல்படவோ பயங்கரவாதிகளின் சொற்களுக்கு கால்நடுங்க செயல்படும் தலைவரல்ல நம் ஜனாதிபதி. இந்திய ஜெனரல் கல்கட்டால் 30,000 இந்தியப் படையினரால் மீட்க முடியாது போன புலிகளின் தொப்பிகலையை (குடும்பிமலை) மீட்டவர்கள் நமது நாட்டின் விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் மீனவர்களினதும் பிள்ளைகளான படை வீரர்களே. பிடிக்க முடியாது என கூறப்பட்டு வந்த கிளிநொச்சியை பிடிப்பதற்கு இன்னும் சொற்ப தூரம் உள்ளது. உயிரை பாதுகாத்துக் கொள்ள பிரபாகரன் தற்போது பங்கருக்குள் மறைந்து கொண்டிருக்கிறார். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்னாள் தலைவர்களான ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜயதுங்க, திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நாட்டில் சமாதானத்தை உருவாக்க புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி பீடமேறியதும் "மைடியர் மிஸ்டர் பிரபாகரன்" எனக் கூறி 42 கடிதங்களை அனுப்பி வைத்தார். பிரபாகரனின் நெருங்கிய நண்பரான வசந்த ராஜா என்பவரை இங்கிலாந்திலிருந்து அழைப்பித்து ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தலைவர் பதவியை வழங்கியிருந்தார். இவற்றை ஏன் செய்தார்கள் என்றால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவே,ஆனால், பிரபாகரன் என்ற பயங்கரவாதி பேச்சுவார்த்தைகளுக்குள் மறைந்து அவரது கையாட்களுடன் கூட்டுச் சேர்ந்து நமது நாட்டை அழிக்கவே முயற்சித்ததை நாம் மறந்து விட முடியாது. இவற்றையெல்லாம் பொறுத்த நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆட்சிபீடமேறியதும் புலிகளை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சமாதான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே புலிகள் நமது இராணுவத்தினரை தாக்கினார்கள். கப்பல்களை தாக்கினார்கள். அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்றார்கள் இறுதியில் மாவில் ஆற்றை மூடி தண்ணீரையும் மறித்தார்கள். இவைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? நமக்குள் பச்சை, நீலம், சிவப்பு என்ற வர்ண பேதம் அல்ல முக்கியம். நாம் நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை காட்டிக் கொடுப்பவர்களுடன் சேர மாட்டேன். எனவே, இந்நாட்டின் சுபீட்சத்திற்காக நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாக செயற்படுவோம். |
Tuesday, October 7, 2008
பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரம் வரை ஒவ்வொரு அங்குல நிலத்திலும் சிங்கக்கொடி பறக்கும்- கெஹலிய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment