வன்னியில் 120 இடம்பெயர்ந்த மக்கள் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். சிறீலங்காப் படையினரின் யுத்த முன்னெடுப்புகளால் வன்னியின் கிழக்குப் பகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்து வீதிகளிலும் காடுகளை வெட்டி மர நிழல்களிலும் தங்கியிருந்தோரே இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகியோர் 120 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்புக் கடிக்கு இலக்காகிய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் தர்மபுர மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிற்சை பெற்று வருவதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment