Wednesday, October 15, 2008

வன்னிக் களமுனையில் 8 சிறீலங்காப் படையினர் பலி! 38 படையினர் காயம்


வன்னிக் களமுனையில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது 8 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 38 படையினர் காயமடைந்துள்ளனர் என சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற மோதலகளில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 36 படையினர் காயமடைந்துள்ளனர்.

இதேபோன்று மணலாறு ஆண்டான்குளம், தண்ணிமுறிப்புக் குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் படைத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment