கடந்த மாதம் புலிகளுடனான மோதல்களில் 200 படையினர் பலி; 997 பேர் காயம் – பிரதமர்
இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்பில் 200 பேர் கொல்லப்பட்டதுடன், 997 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமர் இரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், 13 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment