Thursday, October 2, 2008

யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள்




புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கேற்ப மேற்படி புலிகள் இயக்கத்தினர் கூடுதல் எண்ணிக்கை உள்ள ஒரு அணியாகவோ குழுவாகவோ செயற்படாது சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து யாழ்ப்பாணம் நகரப் பிரதேசங்களை அண்டியுள்ளதும் பற்றைகள், மரங்கள் அடர்ந்ததுமான பகுதிகளில் பரவலாகத் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாகச் சாவகச்சேரி நகரத்தைச் சுற்றியுள்ளதும் யாழ்ப்பாணத்தை நோக்கியதுமான பிரதேசங்களில் காட்டுப்பகுதிகள் கூடுதலாகக் காணப்படுவதால் அவ்வாறு இரண்டு பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பற்றைகள், மரங்கள் அடர்ந்த பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டமற்ற காடுகளாக உள்ள பகுதிகளிலேயே மேற்படி புலிகள் இயக்க விசேட குழுவினர் பதுங்கியிருப்பதாகவும் யாழ்ப்பாணம் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும், இவ்வாறு குறித்த பிரதேசங்களிலுள்ள காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கக் குழுவினர் அண்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை காடுகளுக்குள் பிரவேசிக்கவோ நடமாடவோ வேண்டாமென்று தடை செய்திருப்பதாகவும் குறித்த யாழ். பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த புலிகள் குழுவினர் யாழ்ப்பாணம் நகரத்தில் நிலைகொண்டிருக்கும் அரச படையினர் மீதோ அல்லது தற்போது அவர்கள் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் சாவகச்சேரிப் பிரதேச காடுகளுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அமைந்திருக்கும் முக்கிய படைமுகாம் ஒன்றின் மீதோ அல்லது சில முகாம்கள் மீதோ திடீரென்று ஒன்றிணைந்து தீவிர தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடனேயே இவ்வாறு சிறு குழுக்களாகப் பிரிந்து காடுகளில் பதுங்கியிருப்பதாகவும் யாழ். பாதுகாப்புத்துறை தரப்புத் தகவல்களில் தெரிவிக்கப்படுகின்றன.

லங்காதீப: 29.09.2008

No comments:

Post a Comment