Tuesday, October 7, 2008

தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பில் இந்தியா கவலை தெரிவிப்பு


[செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 03:25 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]
இலங்கையில் இடம்பெற்று வரும் போரில் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பில் இந்தியா தனது கவலையை சிறிலங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியாவுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவர் ஜி.ஜி.ஏ.டி.பாலித கனகொடவை சந்தித்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன், சிறிலங்கா படையினாரின் தாக்குதல்களில் பெருமளவில் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா படையினர் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கள் சீர்குலைந்து வருவது தொடர்பாக கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசு எல்லா நடவடிக்கையையும் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடிய பிரதமரிடம் சிறிலங்காவுக்கான தூதுவரை அழைத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுவதாக இந்திய பிரதமர் தமிழக முதல்வரிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment