Thursday, October 16, 2008

ஜானக பெரேரா படுகொலை விசாரணைகள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது



மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இதுவரையில் அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எம். சமரக்கோன் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாளை முதல் இரகசியப் பொலிஸார் மேற்கொள்ள உள்ளதாக அனுராதபுரம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். சமரக்கோன் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை, ஜானக பெரேரா கொலைச் சம்பவம் குறித்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் விசாரணைகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்து பின்னர் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment