| [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 01:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] |
| அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். |
இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் பிரதான முகாமை அண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 9:45 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். |
Wednesday, October 8, 2008
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்: உயரதிகாரிகள் இருவர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment