Tuesday, October 7, 2008

அனுராதபுரம் காட்டுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல்: இருவர் பலி



சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று முன்நாள் இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சியம்பலகஸ்வெவ காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:20 நிமிடமளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதவியாவிலிருந்து கெப்பிட்டிக்கொலாவ பகுதிக்கு மீன் ஏற்றிவந்த வான் மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் வான் பலத்த சேதமடைந்தது. வானில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். வானும் பலத்த சேதமடைந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் இருவரின் உடலங்களையும் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன், நேற்று காலை அப்பகுதியில் தேடுதல்களும் நடைபெற்றன.

No comments:

Post a Comment