Tuesday, October 7, 2008

ஜானக பெரெரா கொலையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்



சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து அனுராதபுரத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்கள் இடம்பெற்றன.

இன்று திங்கட்கிழமை காலை முதல் பிற்பகல் வரை காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் மலையக தமிழ் இளைஞர்கள் ஏழு பேர் கைதாகியுள்ளனர்.

அனுராதபுரம் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மலையக இளைஞர்களே கைதானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இக்கைது தொடர்பாக பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, மதவாச்சி சோதனை சாவடியில் கொழும்புக்கு வரும் பயணிகள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment