Tuesday, October 7, 2008

வவுனியாவில் துப்பாக்கி்ச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு.


சிதம்பரபுரத்திலும், ஆசிகுளம் வீதி - கல்நாட்டினகுளம் சந்தியிலும் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு இளைஞர்களின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் இந்தச் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சடலங்கள் இரண்டும் அடையாளம் காணப்படவில்லை.

நேற்றிரவு 10.30 மணியளவி்ல் வெள்ளை வான் ஒன்றில் இந்த இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு, சம்பவ இடத்தில் வைத்து இனந்தெரரயாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment