Monday, June 7, 2010

விடுதலைப் புலிகள் சார்பில் கொழும்பில் 12 சொகுசு குடிமனைகள் : புலனாய்வுப் பிரிவினர்



கொழும்பில் 12 சொகுசு குடிமனைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்த 12 சொகுசு குடிமனைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலி முகவர்களினால் இந்த குடிமனை நிர்மாணத்திற்கு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குடிமனைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதனை கண்டறிவதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடிமனைகள் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், விற்பனை வருமானம் புலிகளின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதலீட்டாளர்களுக்கு இடையில் பணத்தை பகிர்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பணத்தை பகிர்வதில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இந்த குடிமனைகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment