Wednesday, June 9, 2010

யாழ் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி பல வருட இடைவெளியின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி


யாழ் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி பல வருட இடைவெளியின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி அதிபர் எல் .ஓங்கார மூர்த்தி இவ்விடுதிக் கட்டிடத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட இப்பாடசாலையில் 1937 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விடுதிகளில் சுமார் 150 முதல் 200 வரையான மாணவர்கள் தங்கிக் கல்வி கற்று வந்தனர்.

எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 1987 ஆம் ஆண்டின் பின் இவ்வசதிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதன் பின்னர் மீண்டும் தற்போது இவ்விடுதி வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 50 மாணவர்கள் தங்குவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வவுனியா பூநகரி போன்ற பிரதேசங்களிலுள்ள வெளிமாவட்ட மாணவர்களும் இணைந்துள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment