
இலங்கையில் எதிர்காலத்திலும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை என்று இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளராகக் கடமையாற்றிய நீதி விசாரணையாளர் எம்.சி.எம்.இக்பால் தெரிவித்துள்ளார்.
அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் கணேசபுரம் பகுதியிலும்,மன்னார் மாவட்டத்தின் நாச்சிக்குடாப் பகுதியிலும் அண்மைய நாட்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டமை குறித்து ஆங்கில இணையத்தளம் ஒன்றில் எழுதிய பத்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
[B]
[/B]
[B]அவர் அப்பத்தியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:[/B]
"இப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமை ஒரு புதினமே அல்ல.இலங்கையில் 1346 மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன என்பது கடந்த வருடம் ஏப்ரல் 24 ஆம் திகதி அமெரிக்க விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட சற்றலைட் புகைப்படங்கள் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.ஆனால் அவை பொதுமக்களுடையனவா?புலிப் போராளிகளுடையனவா?என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
எனவே இன்னமும் ஏராளமான புதைகுழிகள் கண்டு பிடிக்க்கப்படும் என்பது வெளிப்படை.பாதுகாப்புப் படையினர் இப்புதைகுழிகளை இல்லாமல் செய்வத ற்கு முயலாமல் இருப்பார்களானால்,பொதுமக்கள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்களானால் இன்னும் ஏராளமான புதைகுழிகள் நிச்சயம் வெளிப்படும்.
1988களில் சிங்கள இளைஞர்களின் மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.அரசு அவர்களைக் கொலை செய்திருந்தது.ஜே.வி.பி போராளிகள் என்கிற சந்தேகத்தில் அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.60000சிங்கள இளைஞர்கள் வரை காணாமல் போயிருக்கிறார்கள் அல்லது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள இளைஞர்களையே வகைதொகையின்றிக் கொன்று குவித்த சிங்கள அரசு தமிழர்கள் விடயத்தில் கருணையோடு நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது."
No comments:
Post a Comment