![]() |
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சபையில் பொது மக்கள் கலரியில் பாடசாலை மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர் என்பதனால் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு இடமளிக்க வேண்டாம். இராணுவ அதிகாரிகள் தங்களுடைய மனைவியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இராணுவத்தினரை தரக் குறைவாக கூறவேண்டாம். என் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி என் காதலி என்றனர். அவ்வாறாயின் அதனையிட்டு நான் பெருமை கொள்வேன். அது மட்டுமின்றி 32 பெண்களை நான் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் என்ன அதிகாரம் இருக்கின்றது. போதைப் பொருட்களை விற்பவர்களுக்காக இதனைச் செய்ய முடியும். படையினர் தரக் குறைவானவர்கள் அல்லர் என்றார். |
Tuesday, June 8, 2010
தற்கொலை குண்டுதாரி பெண் காதலியா? அவ்வாறாயின் எனக்கு பெருமை: சரத் பொன்சேகா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment