
ஹைகோப் இராணுவ தளபாட கொள்வனவு மோசடிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே வழக்கின் பிரதான சந்தேகநபரான தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஏழு வங்கிக் கணன்னுகளிலும் சுமார் 15 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக மன்றில் ஆஜராகியிருந்த இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தனுன திலகரத்னவை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன பிடியாணை உத்தரவினையும் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment