Friday, June 11, 2010

வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதனை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக டக்ளஸ் தெரிவிப்புஇலங்கையின் இனப்பிரச்சினைத் தீர் வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.


யாழ்ப்பாணம்,ஜூன்12
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர் வுக்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட் டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து மாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச் சர் அங்கிருந்து திரும்பிய பின்னர், தொலை பேசியூடாக யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி. பி.யின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுடன் உரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதியுடன் இணைந்து மேற் கொண்ட இந்தியப் பயணமானது பெரும் வெற்றியை அளித்துள்ளது. புதிய நம்பிக் கைகளைக் கட்டியெழுப்பியுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவி மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர் கள், எம்.பி.க்களை சந்தித்துக் கலந்துரை யாடினோம்.
நாம் நடைமுறைச் சாத்தியமான விட யத்தை முன்வைத்தோம். எமது திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் நலனை முன்னிறுத்தியே எமது கோரிக்கை அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா வுக்குச் சென்று தமிழகத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு தமக்குள்ள உள்நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்க அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்தி வந்தனர்.
அரசியல் தீர்வு குறித்து இந்தியத் தலை வர்களுடன் பேசப்பட்டதுடன் தமிழ் மக் களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் நாம் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினோம். மிதிவெடி அபாயம், காணி உரிமை கோரல் பிரச்சினை, நிதிப்பிரச்சினை போன்றவை குறித்து நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேறிய மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடு களை அமைத்துக் கொடுக்க இந்தியா ஒப் புக்கொண்டது. இதற்கென ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கும் உறுதியளித் துள்ளது.
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கு புனரமைத்தல், மாநகர சபைக்குக் கட்ட டம் அமைத்தல், உள்ளிட்ட சில திட்டங் களுக்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளித் துள்ளன.
இலங்கைக்கு ஆயிரம் கோடி ரூபாவை 20 வருட கடன் அடிப்படையில் வழங்கு வதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன.
மேலும் என்னைக் கைது செய்யக் கோரி சட்டத்தரணி புகழேந்தி தொடர்ந்த வழக் கானது உள்நோக்கம் கொண்டது. அது என்மீது சேறு பூசும் செயலாகும். சட்ட ரீதி யாக அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். 1986இல் தீபா வளி தினத்தன்று இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துக்கும் எனக்கும் நேரடித் தொடர் பில்லை. அது திட்டமிட்ட கொலையுமில்லை. தவறுதலாக இடம்பெற்றதாகும்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்தியா சென்ற என்மீது வழக்குத் தொட ராமல் இந்த முறை வழக்குத் தொடர முயற்சிப்பது ஏன்? அது உள்நோக்கம் கொண்டதாகும் என்றார்.No comments:

Post a Comment