Wednesday, June 9, 2010

கண்டாவளைப் பகுதியில் நேற்று மனித எலும்புக்கூடு மீட்பு




கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதி யில் வீட்டுக்காணியில் மனித எலும்புக் கூடு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது.
வீட்டு உரிமையாளர் எலும்புக்கூடு இருப்பது குறித்து கிளி நொச் சிப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அதை அடுத்து பொலி ஸாரினால் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெ. சிவ குமார் அதனைப் பார்வையிட்டு மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட்டார். இந்த எலும்புக்கூடு, குறித்த வீட்டின் பின்புறமாக 100 மீற்றர் தூரத்தில் வயல் வெளிப் பகுதியில் பற்றைகளால் மூடப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை இந்த எலும்புக்கூடு தமது தந்தையாருடையதாக இருக்கலாம் என குறித்த வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் கண்டா வளையில் இருந்து தாம் இடம்பெயர்ந்த தாகவும் சிலநாள்களின் பின் வீட்டைப் பார்ப்பதற்காகச் சென்ற தமது தந்தை மீண் டும் திரும்பிவரவில்லை எனவும் குறிப் பிடுகின்றனர்.
எனினும் குறித்த எலும்புக்கூடு நீதிவா னின் உத்தரவுப்படி மருத்துவப் பரிசோத னைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment