Tuesday, June 8, 2010

யாழ்ப்பாணமே இவ்வருடம் டெங்கு வேகமாகப் பரவும் மாவட்டம் : விசேட வைத்திய நிபுணர்







இவ்வருடம் டெங்கு அதிகமாகப் பரவும் மாவட்டமாக யாழ்பாணம் உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களில் அது மேலும் தீவிரமடையலாம் என விசேட சமூகநல, சுகாதார, வைத்திய நிபுணர் டாக்டர் காமினி ஜயக்கொடி தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டமொன்று கண்டி, பொல்கொல்லையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில்,

"இதுவரை டெங்கு நோயால் 85 பேர் வரை மரணமடைந்துள்ளனர். 1962ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக இலங்கையில் டெங்கு இனம் காணப்பட்டது. 1995 முதல் இது தீவிரமடையத் தொடங்கியது.

கடந்த வருடம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக கண்டி இனங்காணப்பட்டது. இம்முறை அது சற்றுக் குறைத்துள்ள போதும் அடுத்த இரண்டு மாதங்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது. காரணம் அடுத்த இரு மாதங்கள் அங்கு டெங்கு வேகமகப் பரவும் காலமாகும்.

இவ்வருடம் இதுவரை ஆகக் கூடுதலாக டெங்கு நோயாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் இதற்கு அடுத்த நிலையில் உள்ளன. சுமார் 2000 பேர் அம்மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பதிவாகியுள்ளனர்.

சுகாதாரத் திணைக்களம் பெரும்முயற்சி எடுத்து நுளம்பினால் பரவக்கூடிய மலேரியா, யானைக்கால் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தியது. எனினும் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் வித்தியாசமானவை. அவற்றைப் பொது மக்களின் ஒத்துழைப்பின்றிக் கட்டுப்படுத்த முடியாது" என்றா

No comments:

Post a Comment