![]() |
கொழும்பு காலி முகத்திடலில் மீண்டும் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த ஓராண்டு பூர்த்தி கடந்த மே மாதம் 20ம் திகதி கொண்டாடப்பட இருந்தது. குறித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலை சூழ்நிலையினால் நிகழ்வுகள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால் எதிர்வரும் 18ம் திகதி போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. |
Monday, June 7, 2010
போர் வெற்றிக் கொண்டாட்ட பேரணியை வரும் 18ம் திகதி நடத்த திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment