Wednesday, June 9, 2010

ஷெல் வீச்சிலேயே வன்னியில் வீடுகள் அழிந்தன அரசாங்கமே அவற்றை அமைத்துத் தர வேண்டும்! தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்து



"யுத்தத்தின்போது ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களாலேயே வன்னியில் பல வீடுகள் நிர்மூலமாகின. எனவே அந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கின்றது. வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும்படி நாம் தொடர்ந்து அரசை வலியுறுத்துவோம்.



"யுத்தத்தின்போது ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களாலேயே வன்னியில் பல வீடுகள் நிர்மூலமாகின. எனவே அந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கின்றது. வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும்படி நாம் தொடர்ந்து அரசை வலியுறுத்துவோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டனர். சம்பந்தன் எம்.பி. தொடர்ந்து பேசும்போது யுத்தத்தின்போது வன்னியில் 80 முதல் 90 சதவீதமான வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிந்துவிட்டன. இவற்றில் 30 முதல் 40 \தவீதம் வரையிலான வீடுகள் நிரந்தர கல் வீடுகளாகும். வன்னியில் மீளக் குடியேறுபவர்களுக்கு ஐயாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபா வரை வழங்கப்படுகின்றது. சிலருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை.
வலுவான காரணமின்றித் தடுத்துவைப்பு
வன்னியில் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறு முகாம்களில் வலுவான காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் இவர்களை விடுவிக்க வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். இவர்களில் அச்சம் காரணமாக சரணடைந்தவர்களும் இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கு உதவும்படி உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க நாம் தயார். தமிழ் மக்களுக்காக மட்டுமின்றி சிங்கள மக்களுக்காகவும் இந்த வேண்டுகோளை விடுக்கத் தயார்.
உலக உணவுத்திட்டம் மீளக் குடியேற்றப்பட்டவர்களுக்கு அரிசி, மா, சீனி, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றது. அடுத்த அறுவடை காலம்வரை இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்படவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வழங்கவும்
வன்னியில் பாடசாலைக் கட்டடங்கள் சேதமுற்றுள்ளன. அங்குள்ள பிள்ளைகளுக்குச் சீருடை இல்லை. பாடநூல்கள் இல்லை. இவற்றை வழங்கவும், பாடசாலைக் கட்டடங்களைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வன்னி மக்கள் ஒரு குடும்பத்துக்கு இரு மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் வைத்திருந்தனர். அவர்களின் போக்குவரத்து வசதிக்காக குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் வழங்கப்படவேண்டும் எனவும் அரசைக் கேட்டுள்ளோம் என்றார்

No comments:

Post a Comment