Tuesday, June 8, 2010

ஜனாதிபதி மஹிந்த இந்தியா பயணமானார்

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் இந்தியா பயணமானார்கள். ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்ளிட்ட சிரேஷ்ட இந்திய தலைவர்களையும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சந்திக்கவுள்ளனர். அத்துடன் அவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.

இதேவேளை, பயங்கரவாதத்தை அடக்குதல்,கைதிகள் பரிமாற்றம், குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துதல், வர்த்தகம் மற்றும் கலாசாரம், உட்பட சில உடன்படிக்கைகளில் இந்தியாவுடன் ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார். இந்தியாவுக்கான ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ப்லரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment