Tuesday, June 8, 2010

பிற்போடப்பட்டிருந்த யுத்த வெற்றி கொண்டாட்டம்; 18ஆம் திகதி நடத்த ஏற்பாடு

காலநிலை சீர்கேடு காரணமாக பிற்போடப்பட்ட போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதன் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 20ஆம் திகதி காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கூடிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அத்தினங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இந்த வெற்றி விழா அணிவகுப்பு நிகழ்வுகள் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே இந்த வெற்றி விழா நிகழ்வுகளை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான ஒழுங்குகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.

No comments:

Post a Comment