Tuesday, June 8, 2010

விடுதலை புலிகள் மீண்டும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி

வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்று அரசு எச்சரித்திருப்பதாக சீன நாட்டு ஊடகமொன்று தெரிவித்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குயேற்றப்படும் மக்களுடன் மக்களாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தனி நாடொன்றைக் கோரும் கனவு இதுவரை விட்டுக்கொடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனாலேயே, மே மாதமளவில் 77 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டி.எம்.ஜயரட்ன மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment