Tuesday, June 8, 2010

கைது செய்ததாக கூறப்படும் கே.பி.யும் கப்பல்களும் எங்கே?-ரவி கருணாநாயக்க எம்.பி. கேள்வி







படையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி. (குமரன் பத்மநாதன்) எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கப்பல்கள் எங்கே என்று ஐ.தே.க. எம்.பி.யான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

குறுக்குக் கேள்வி வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புறம்பானது என்பதனால் பதிலளிக்க முடியாது என ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.

ரவி கருணா நாயக்க எம்.பி. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் நட்ட ஈட்டு உரிமை பெறுவதற்குரிய படையினரின் எண்ணிக்கை தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன நட்ட ஈட்டு உரிமை பெற்ற படைகளின் எண்ணிக்கையும் தெரிவித்தார். இதனிடையே எழுந்த ரவி எம்.பி கைது செய்யப்பட்ட கே.பி. எங்கே, கப்பல்களும் எங்கே, யுத்த வீரனான ஜெனரல் சரத்பொன்சேகாவை கைது செய்து தடுத்து வைத்துள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான தினேஸ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அதோ இருக்கிறார் என ஜெனரல் சரத் பொன்சேகாவை சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

No comments:

Post a Comment