Wednesday, June 9, 2010

13 ஆவது திருத்த அடிப்படையில் தீர்வு; புனர்வாழ்வுப் பணியைத் துரிதமாக்குக! மன்மோகன் சிங் வலியுறுத்து; மஹிந்த இணக்கம்





* இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.
* சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார்.
* போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்த வேண் டும் என்ற இந்தியப் பிரதமரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதி பதி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
* இதேவேளை வடக்கு, கிழக்கைச் சேரந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளைக் அமைத்துக்கொடுப்பதற்கு
இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.
இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ண மடு தலைமன்னார் ரயில்வே பாதையை அமைப்பதற்கு இந்தியா 800 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்கும்.
ண பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம், தூத்துக்குடி கொழும்பு பாதைச்சேவை மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் பாதைச் சேவைகளைப் புனரமைக்கவும், மீளத்தொடங்கவும் இந்தியா உதவிகளை வழங்கும்.
ண இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியாவின் கொன்சல்ஜெனரல் அலுவலகங்களைத் திறத்தல்.
ண கல்வித்துறை வளர்ச்சியில் இருநாடுகளும் இணைந்து செயற்படுதல்.
ண பாதுகாப்பு, மின்சக்தி, ரயில் போக்குவரத்து மற்றும் கலாசாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தல்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், குற்றவியல் சம்பந்தமான சட்ட விவகாரங்கள், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை சொந்த நாட்டிடம் கையளித்தல் ஆகிய துறைகளில் நெருங்கிய உறவுகளையும், காத்திரமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தல், அவர்கள் சம்பந்தமாகவும் நேற்றைய பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் மூலம் இணக்கம் காணப்பட்டது.

No comments:

Post a Comment