இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் இன்று பிரதமர் டி.எம் ஜயரத்னவை சந்திக்கவுள்ளார் என இலங்கைக்கான மலேஷியத்தூதுவர் ரொஸ்லி இஸ்மாயீல் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.தன்னுடைய துணைவியாருடன் இலங்கை வந்துள்ள மஹாதிர் முஹம்மத் இலங்கையின் வர்த்தக சமூகத்தின் அழைப்பின் பேரிலேயே வருகை தந்துள்ளதாகவும் ரொஸ்லி இஸ்மாயீல் கூறினார்.
எனினும்,கலாநிதி மஹாதிர் முஹம்ம்தின் விஜயம் உத்தியோகபூர்வமானது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.
மலேஷிய முன்னாள் பிரதமர் கலாநிதி மஹாதிர் முஹம்மத் நாளை நாடு திரும்புவார் என இலங்கையிலுள்ள மலேஷியத்தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment