Monday, June 7, 2010

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் - தமிழக சட்டத்தரணிகள்



தமிழ்நாடு சூழமேடு பகுதியில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி நீதிமன்றத்தினால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த பிடியாணை இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடன் நாளை இந்தியா செல்ல இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் வைத்து கைது செய்ய வேண்டும் என தமிழக சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் நீதி நிர்வாக எல்லைக்குள் அவர் எங்கிருந்தாலும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அந்த பிடியாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே நாளை இந்தியாவுக்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லியில் வைத்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பிடியாணை பற்றிய அறிவித்தலை நீதிமன்றத்தில் பார்வைக்கு வைக்குமாறு சட்டத்தரணி ஒருவர் நீதிமன்ற பதிவாளரை கேட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள பிரபல சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கே.கே.நகர் வடபழனியில் பிள்ளை ஒன்றை கடத்தி 1500ரூபா கப்பம் பெற்ற வழக்கு ஒன்றும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக உள்ளதாக தமிழக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment